திம்பம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்

திம்பம் மலைப்பாதையில்  யானைகள் நடமாட்டம்
X
திம்பம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்
திம்பம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப் பகுதிகளுக்கு இடையே செல்லும் திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழகம் - கர்நாடகவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. திம்பம் மலைப்பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் நடமாடுவதை வான ஓட்டிகள் பார்த்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் சாலையோரம் இரண்டு யானைகள் நடமாடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைந்தனர். வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு யானைகள் வழிவிடும் வரை காத்திருந்தனர். யானைகள் சாலையோர செடி, கொடிகளை தின்று போது வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, திம்பம் மலைப் பகுதியில் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்ன எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Next Story