விக்கிரவாண்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பொன்முடி

X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி பேரூராட்சியில் திமுக மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி தலைமையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கலந்துகொண்டு திமுக கொடியேற்றி, மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை , எளிய மக்களுக்கு அன்னதானம் , பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், தொகுதி மேற் பார்வையாளர் சிவ. ஜெயராஜ் , பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் சலாம், பேரூர் செயலாளர் நைனா முகம்மது , பேரூராட்சி துணைத் தலைவர் ச.பாலாஜி ஒன்றிய செயலாளர்க ஜெ.ஜெயபால், உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

