சேலத்தில் தந்தையை தாக்கிய மகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது

X
சேலம் மல்லமூப்பம்பட்டி ராமகவுண்டனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது மகன் முருகன் இந்த நிலையில் தந்தைக்கு தெரியாமல் முருகன் ஒரு ஆட்டை பிடித்து சென்றுள்ளார். இதை அறிந்த ஏழுமலை மகனிடம் கேட்டுள்ளார் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் சிறிது நேரத்தில் நண்பர்கள் மாதேஷ் மற்றொரு முருகன் ஆகியோருடன் வீட்டிற்கு வந்து தந்த ஏழுமலையிடம் தகராறு செய்து பிளாஸ்டிக் பைபால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி முருகன் அவரின் நண்பர்கள் மாதேஷ், மற்றொரு முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

