திருச்சுழி நகர்ப் பகுதியில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுகவின் சாதனைகளை பொதுமக

திருச்சுழி நகர்ப் பகுதியில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுகவின் சாதனைகளை பொதுமக
X
திருச்சுழி நகர்ப் பகுதியில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிய அதிமுக வினர்.*
திருச்சுழி நகர்ப் பகுதியில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிய அதிமுக வினர். விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் M.S.R.ராஜவர்மன் ஏற்பாட்டில், திருச்சுழி நகர்ப் பகுதியில் முக்கிய சாலைகள் வழியாக வீதி வீதியாக சென்று திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சுழி காவல் நிலையம் அருகே இருந்து தொடங்கிய திண்ணைப் பிரச்சாரத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுகவினர் அருப்புக்கோட்டை சாலை, காரியாபட்டி சாலை, மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதைனைகளை விளக்கிக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பொதுமக்களிடம் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுகவினர் வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் அதிமுகவின் இந்த திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரேசன், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர்கள் முனியாண்டி, முத்துராமலிங்கம், கருப்பசாமி, அம்மன்பட்டி ரவிச்சந்திரன், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story