சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை இன்று தொடங்கினார்

X
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் வேறு எந்த கோவிலிலும் காண கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழக மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்து நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரை தேரோட்டத்தில் தேரை இழுத்து வழிபட்டு செல்வார்கள். அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரித்தல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாய சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி சமயபுரம் மாரிஅம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பாகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பார். இந்த 28 நாட்களும் திருக்கோயில் உள்ள அம்மனுக்கு தளிகை நெய் வைத்தியம் கிடையாது, துள்ளு மாவு, நீர்மோர், பானக்கம் மற்றும் இளநீர் செய்யப்படுகிறது. பூச்சரித்தல் விழாவையொட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் அம்மனுக்கு காப்பு கட்டுவதுடன் தொடங்கி பூச்சொரித்தல் விழா நடைபெற்றது. முதல் வார பூச்செரித்தல் விழாவான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணையான பிரகாஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் யானையின் மீது பூத்தட்டுகளை வைத்தும் கையில் ஏந்தியும் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று முதல் பூச்செரிச்சல் விழா தொடங்கியதால் சமயபுரம் கோவில் சுற்றுவட்டார பகுதியில் விழா கோலம் கொண்டுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 7க்கும் மேற்பட்ட உயர் கோபுரங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Next Story

