ஆதார் கார்டு வழங்க சிறப்பு முகாம்

X
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் புனித அன்னாள் மன நல காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். முகாமில் 18 மாற்றுத்திறனாளிளுக்கு ஆதார் கார்டு வழங்கும் பொருட்டு கணினி பதிவேற்றம் செய்யப்பட்டது.
Next Story

