அருள்மிகு முத்தாலம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்.

அருள்மிகு முத்தாலம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம்.
X
ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலில் ஜீர்ணோத்தர அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீவிக்னேஷ்வரா பூஜை, கோ பூஜை, ஸ்ரீகணபதி, ஸ்ரீலஷ்மி, ஸ்ரீநவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி,அங்குரார்ப்பணம், வேதபாராயணம், யாக காலபூஜைகள் நடத்தப்பட்டு கலச புறப்பாடு செய்து கோயிலின் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உள்ளிட்ட திமுக கட்சியினரும், ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக கட்சியினரும், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமான கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் லஷ்மி நகர் மக்கள் செய்திருந்தனர்..
Next Story