தேனி அரசு மருத்துவமனை வாயில் முன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தேனி அரசு மருத்துவமனை வாயில் முன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
X
சின்னமுனியாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு பொய் புகாரே காரணம் எனக்கூறி உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனை வாயில் முன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருவதால் பரபரப்பு நிலவியது. காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சின்ன முனியாண்டி என்பவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவியிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் சின்னமுனியாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு பொய் புகாரே காரணம் எனக்கூறி உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனை வாயில் முன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story