என்னை ஒரு ஆளுமையாக நின்று பார்ப்பதற்கான இந்த இடத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தது அண்ணன் சீமானும் ஒரு காரணம் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்

என்னை ஒரு ஆளுமையாக நின்று பார்ப்பதற்கான இந்த இடத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தது அண்ணன் சீமானும் ஒரு காரணம் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்
X
என்னை ஒரு ஆளுமையாக நின்று பார்ப்பதற்கான இந்த இடத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தது அண்ணன் சீமானும் ஒரு காரணம் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், மார்ச் 9- ஜெயங்கொண்டம் - என்னை ஒரு ஆளுமையாக நின்று பார்ப்பதற்கான இந்த இடத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தது அண்ணன் சீமானும் ஒரு காரணம் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தெரிவித்துள்ளார் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக மாறிய அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை ஒரு எளிய மக்களுக்கான தேவையையும் அவர்களுக்கான உரிமைகளையும் போராடி தான் பெற வேண்டிய சூழல் உள்ளது வர்க்க பாகுபாடும் சாதிய பாகுபாடும் இல்லாத ஒரு அரசியல் உருவாக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும். பல கட்சிகளில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்றால் கூட ஒரு பெரும் பணம் செலவு பண்ணக்கூடிய ஓட்டுக்கு பணம் செலவு பண்ணக்கூடிய கட்சிக்கு செலவு பண்ணக் கூடியவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது தற்போது அந்த அரசியல் களம் சிறிது மாறி உள்ளது அடிப்படை மக்களிடமிருந்து தனக்கான அரசியலை தீர்மானிக்கக் கூடிய தங்களுக்கான உரிமையை தாங்களை மீட்டெடுக்கக்கூடிய சூழல் கொஞ்சம் மாறி உள்ளது அது இன்னமும் பல பேருக்கு கேள்விக்குறியாக தான் உள்ளன வாழக்கூடிய மக்கள் எல்லாரும் உயர்ந்த நிலையில் இருக்கிறவர்கள் என்பது குறைவு அதிகப்படியாக இருப்பவர்கள் நடுத்தர மக்களே. இவர்களுக்கான அரசியலை யார் பேசுவார் அவர்கள் உரிமைகள் குறித்து யார் பேசுவார் எனவே தான் எளிய மக்களுக்கான அரசியலை உருவாக்க வேண்டும் அவர்கள் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களே பெற்றுக் கொள்ள வேண்டும் அவர்களுக்கான உரிமையை அவர்களே பெற்றுக் கொள்ள வேண்டும் எளிய மக்களும் அரசியல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன் தமிழுக்காக போராடிய மக்கள் இங்கு இருக்கும்போது மீண்டும் பின்வாசல் வழியாக வந்து மும்மொழி கொள்கை என்ற பெயரில் இன்னொரு மொழியை மூன்றாவது மொழியாக கட்டாய பாடமாக அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஒரே வகுப்பாறையில் உள்ள மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கான ஆசிரியர்களை நியமிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதா ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது மாணவர்களுக்கான அறை வசதி இல்லாத நிலையில் மரத்தடியில் இருந்து கல்வி கற்கிறார்கள் ஆனால் கல்விக்கான நிதியை தர மறுக்கிறீர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஐந்தாவதுக்கு பொதுத்தேர்வு என கூறுகிறீர்கள் இந்தச் சட்டத்தை இயற்றியவர்கள் ஐந்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிதான் சென்றார்களா என கேள்வி எழுப்பிய காளியம்மாள் இந்த சட்டத்தை இயற்றியவர்கள் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புகளில் பொது தேர்வு எழுதாமல் சட்டத்தை இயற்றக்கூடிய இடத்தில் உள்ளார்கள் அவர்களை விட தற்போது படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கூட மாணவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடிய சூழலும் உள்ளன மாநில அரசு திட்டவட்டமாக இதை ஏற்க முடியாது என மறுத்துள்ளது. இச்செயலுக்காக பாராளுமன்றத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரியில் இருந்து சென்ற 40 எம்பிகளும் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் இந்த மாதிரியான செயல்களை தடுக்க வேண்டும் எந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் 20 ரூபாய்க்கு புத்தகம் இருக்கிறது தேவைப்பட்டால் அதை வாங்கி கற்றுக் கொள்ளப் போகிறார்கள் பிறகு எதற்கு இந்த மொழி திணிப்பு இருக்கக்கூடிய பாடத்திட்டங்களே படிப்பதற்கு சிரமமாக உள்ள நிலையில் இன்னொரு மொழியை கற்றுக் கொளள நான் தயாராக இருக்கிறேன் என பெற்றோர்களிடமோ மாணவர்களிடோமோ கணக்கெடுத்தீர்களா? எந்த பெற்றோர்களாவது எனது குழந்தைக்கு இந்த மொழி வேண்டும் என கேட்டார்களா எந்த வித கருத்துக்களும் கேட்காமல் நீங்கள் எப்படி ஒரு மொழியை திணிக்க முடியும் என கூறினார் எல்லா மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன இந்தியாவில் 40 நிமிடத்தில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார் தொடர்ந்து இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ஆகிக்கொண்டே செல்கிறது இதனை தடுப்பதற்கு சட்டங்கள் ஏன் கடுமையாக்கப்படவில்லை ஒரு சில நாடுகளில் பெண்ணின் மீது கை வைத்தாலோ தவறாக பார்த்தாலும் தவறாக நடத்தினாலும் கடும் தண்டனை விதிக்கிறார்கள் அதனால் அங்கு பெண்கள் மீது கை வைக்க பயம் வருகிறது ஆனால் இங்கே பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உல்லாக்கப் படுவதற்கான அனைத்து சூழலையும் உருவாக்கி வைத்துள்ளார்கள் சட்டங்கள் தண்டனைகள் கடுமையாகப் பட்டால் தான் இந்த பாலியல் குற்றங்கள் குறையும் அதே போல் இந்த குற்றங்கள் உருவாக்குவதற்கான சமூக சூழலான போதை கலாச்சாரத்தை ஒழித்து கட்டினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என கூறினார் வருங்காலங்களில் உங்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு எந்த முடிவாக இருந்தாலும் நான் யோசித்து அதை முடிவு செய்து அறிவிப்பேன் என கூறினார் சீமான் குறித்த கேள்விக்கு ஒரு வாய்ப்பு என்பது இரண்டு காலத்தில் அமையும் ஒன்று திறமை இன்றொன்று அமையப்படுகின்ற வாய்ப்பு இந்த இடத்தில் நின்று நான் பேசுவதற்கோ என்னை ஒரு ஆளுமையாக நின்று பார்ப்பதற்கோ இந்த இடத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சீமானும் ஒரு காரணம் என கூறினார்
Next Story