கரூர் கிழக்கு மாவட்ட விசிக சார்பில் செயற்குழு கூட்டம்

கட்சியை வலுப்படுத்துதல் மற்றும் மகளிர் மாநாடு குறித்து கருத்துரை
கரூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட தோகைமலை மேற்கு ஒன்றியம் நாகனூர் மற்றும் கழுகூர் ஊராட்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும் முகாம் பொறுப்பாளர் குமரேஸ்வரன் தலைமையில் செயற்குழு கூட்டம் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதில் ராஜலிங்கம் வரவேற்புரை வழங்கினார். தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கிருஷ்ணராயபுரம் தொகுதி துணை செயலாளர் சரவணன் மற்றும் குளித்தலை ஒன்றிய தொகுதி செயலாளர் லெட்சுமணன் வாழ்த்துரை வழங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு (எ) சக்திவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் அவிநாசி கட்சியை வலுப்படுத்த கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர்கள் (கல்வி, பொருளாதாரம் ) பாலகுமார், இளங்கோவன் (சமூக ஊடகம்), தோகைமலை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபு, மலைவேல், இளஞ்சிறுத்தை ஒன்றிய செயலாளர் சரத்குமார் மற்றும் முகாம் பொறுப்பாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story