செம்மடை குடியிருப்பு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

செம்மடை குடியிருப்பு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.
செம்மடை குடியிருப்பு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, செம்மடை குடியிருப்பு பகுதி வளாகத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ வலம்புரி கணபதி ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை மங்கள இசை உடன் துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்ணியாகம், வேதி கார்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவிலை வலம் வந்து, மூலவர் ஸ்ரீ வலம்புரி கணபதி சுவாமிக்கு அபிஷேகம் செய்து கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story