அருள்மிகு ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.
போளூர் அடுத்த இலுப்பகுணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த இலுப்பகுணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு யாகங்கள் பூஜைகள் நடைபெற்ற நிலையில் மேல தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் புறப்பாடு நடைபெற்று வந்த நிலையில் பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலுப்பகுணம், கேளூர், களம்பூர், வடமாதிமங்கலம், சந்தவாசல், போளூர், ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story



