கோவை: பேருந்து ஒன்றை ஒன்று முந்தி சென்ற முயன்றதால் விபத்து !

கோவை: பேருந்து ஒன்றை ஒன்று முந்தி சென்ற முயன்றதால் விபத்து !
X
கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே இரு அரசு பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன. அப்போது இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று உரசியதில் சிறிய விபத்து ஏற்பட்டது.
கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே நேற்று இரு அரசு பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றன. அப்போது இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று உரசியதில் சிறிய விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இரு பேருந்து ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று குடும்பத்தோடு வெளியே சென்று கொண்டிருந்தவர்கள், மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பந்தய சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story