புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் ரமேஷ், மாநில மூத்தோரணி அமைப்பாளர் செல்வகணபதி, வட்டார கல்வி அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கொரடாச்சேரி வட்டாரக்கல்வி அலுவலர் விமலா, பணி நிறைவு பெற்ற கண்காணிப்பாளர் கன்னிகா பரமேஸ்வரி, சுசிலா ஆகியோர் கலந்து கொண்டு மகளிருக்காக பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவில், மன்றத்தின் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில், மன்ற மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.
Next Story

