சேலம் சரக காவல்துறை டிஐஜி தர்மபுரியில் ஆய்வு

சேலம் சரக காவல்துறை டிஐஜி தர்மபுரியில் ஆய்வு
X
தர்மபுரியில் 100 பவுன் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம்,சேலம் சரக காவல்துறை டிஐஜி நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வரும் ஷேர்லின் பெல்மா இவர் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார் நேற்று முன்தினம் இவரது வீட்டை மர்ம நபர்கள் உடைத்து பிரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அதியமான கோட்டை காவலர்கள் வழக்கு பதிந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன் தலைமை தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த தனிப்படையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா..? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் சரக காவல்துறை டிஐஜி உமா, கொள்ளை நடந்த ஆசிரியை வீட்டிறகு நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் பின்னர் அவர், கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள் ஏதேனும் உள்ளதா..? எனவும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால சுப்ரமணியம் துணை சூப்பிரண்டு சிவராமன், அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.
Next Story