நாகர்கோவிலில் உடைந்து தொங்கிய கதவுடன் இயங்கிய அரசு பஸ்

நாகர்கோவிலில் உடைந்து தொங்கிய கதவுடன் இயங்கிய அரசு பஸ்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலத்தில் 12 பணிமனைகளில் இருந்து 750 மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் பின்பக்கத்தில் உள்ள கதவு உடைந்து பெயர்ந்து தனியே தொங்கிய வண்ணம் ஆபத்தான நிலையில் விபத்து ஏற்படுத்தும்  வகையில் பஸ் ஒன்று நேற்று இயக்கப்பட்டது.      இதை பின்னால் வாகனங்கள் சென்றவர்கள் வீடியோ எடுத்த அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆபத்தான முறையில் கதவு பேருந்து தொங்கி சாலையில் செல்வோர் மீது மோதும் வகையில் இருந்த போதிலும் அதனை ஒட்டியவர் எந்தவித கவனமும் இன்றி அந்த பஸ்ஸை ஒட்டியதாக தெரிகிறது.       இதையடுத்து  தொழில்நுட்ப பணியாளர் வேல்முருகன் என்பவர் அந்த பஸ்சை இயக்கியது தெரிய வந்தது. அவர் பழுதாகி வழியில் நின்ற ஒரு பஸ்சை சரிய செய்ய கதவு பழுதடைந்த பஸ்சை எடுத்து சென்றது தெரிய வந்தது.  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story