பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்

பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பேரமைப்பு கூட்டம்
X
காரங்காடு
குமரி மாவட்டம் காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் பேரவை கூட்டம் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்பணி சுஜின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ரோஸ்லெட், ஆசிரியை லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் பெலிக்ஸ்ராஜன் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் வரும் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பது. தாங்கள் பயின்ற காரங்காடு பள்ளியை வர்ணம் பூசி கொடுப்பது. இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை மாணவர்கள் என்பதால் அவர்கள் கல்வி தரம் சிறக்க இயன்ற பங்களிப்பை கொடுப்பது. 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் 102-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1979-80 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட 10 ஆம் வகுப்பு, 2012-13 ஆம் கல்வி ஆண்டில் +2 வகுப்பும் தொடங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவர்கள் டோமினிக் ஜான்ராஜ் மைக்கேல் ராஜ், சுதாகர், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் நெல்சன் நன்றி கூறினார்.
Next Story