சோளிங்கர் அருகே நாடக மேடை கட்ட பூமி பூஜை

சோளிங்கர் அருகே நாடக மேடை கட்ட பூமி பூஜை
X
நாடக மேடை கட்ட பூமி பூஜை
சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜ் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என்.பூர்ணசந்தர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். அப்போது கட்டுமான பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் பணிகளை முடித்து நாடக மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞ ரணி கார்த்திக், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்திமுருகேசன், ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் விவேக், ஊர் நாட்டாமைதாரர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story