வேதாரண்யத்தில் சாலை ஓடுதளம் மேம்படுத்தும் பணியினை

வேதாரண்யத்தில் சாலை ஓடுதளம் மேம்படுத்தும் பணியினை
X
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் கோட்டம் வேதாரண்யம் உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலையான தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், கோடியக்கரை வரை உள்ள சாலையில், சாலையின் ஓடுதளத்தை மேம்படுத்தும் பணியினை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருச்சி தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, நாகை தர கட்டுப்பாடு உதவி பொறியாளர் கிருபாகரன், வேதாரண்யம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் மதன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story