கடையம் அருகே ரயில் மோதி சிதைந்து கிடந்த உடல்

கடையம் அருகே ரயில் மோதி சிதைந்து கிடந்த உடல்
X
ரயில் மோதி சிதைந்து கிடந்த உடல்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப்பாலம், செங்கோட்டை - நெல்லை ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக பகுதி பொதுமக்கள் கண்டனர் உடனே இன்று காலை தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பெரியது பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்தவர் யார்? தற்கொலையா? கொலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story