வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் இருவர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பந்தல் அமைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மீது கார் மோதி விபத்தில் 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழப்பு வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் சின்னத்தம்பி மற்றும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ராமு ஆகிய இருவரும், இன்று பந்தல் அமைப்பதற்காக நெக்குந்தி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு நெக்குந்தி சுங்க சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் காரை தற்போது பிடித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ராமு வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பி தற்போது, பந்தல் அமைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற போது கார் மோதி ராமு மற்றும் சின்னதம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story




