சுசீந்திரம் :  லாரி டிரைவர் இரவில் வெட்டிக் கொலை 

சுசீந்திரம் :  லாரி டிரைவர் இரவில் வெட்டிக் கொலை 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). லாரி டிரைவர். இவர் நேற்று இரவு சுசீந்திரம் அருகே உள்ள மயிலாடி தனியார் பள்ளி எதிரே உள்ள கல் பட்டறையில் வெட்டுக் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.         சம்பவ இடத்திற்கு அஞ்சு கிராமம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.        கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஈஸ்வரன் சிலருடன் அந்த கல் பட்டறையில் அமர்ந்து மது அருந்தியதாக  கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில்  கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ஈஸ்வரனுக்கும் அவரது சகோதரருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்னுரகத்தில் கொலை நடந்ததா? என்ற அடிப்படையிலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story