அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு மற்றும் இராஜாக்கமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 24 கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்திற்கும், தக்கலை வட்டாரத்தை சேர்ந்த 17 கர்ப்பிணித் தாய்மார்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கும், மேல்புறம் வட்டாரத்தை சார்ந்த 15 கர்ப்பிணித் தாய்மார்கள் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், தோவாளை வட்டாரத்தை சார்ந்த 5 கர்ப்பிணித் தாய்மார்கள் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கும், திருவட்டார் வட்டாரத்தை சார்ந்த 3 கர்ப்பிணித் தாய்மார்கள் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.       மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்தில் மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவக்கல்லூரி முதல்வர், மகப்பேறு துறைத்தலைவர் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் முதலானோர் அடங்கிய குழுவினர் மருத்துவக்கல்லூரிக்கு வந்த கர்ப்பிணித் தாய்மார்களுடன் உரையாடினர். மேலும் அங்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் (24 x 7 மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவம், ஸ்கேன் வசதி, பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, 24 மணிநேர வெந்நீர் வசதி, போன்றவை) நேரடியாக காண்பிக்கப்பட்டது.       மேலும் இலவசமாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் மாவட்ட சுகாதார அலுவலரால் விளக்கிக் கூறப்பட்டு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அன்றாட கர்ப்பக்கால சிகிச்சைகளுக்காக ஏற்படும் கூடுதல் செலவுகளைத் தவிர்த்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான சேவைகளை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்தி, அவர்கள் பிரசவத்தை அரசு மருத்துவமனைகளிலே திட்டமிட வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
Next Story