மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
X
மானாமதுரை அருகே மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ராஜகம்பீரம் புதூரைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன்(65). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மாடுகளை தேடி விளைநிலங்கள் பகுதிக்குச் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் தேடி வந்தநிலையில், தனியார் விளைநிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின் சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story