தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு உதகையில் துவங்கியது ஒரு வார காலம் ஓவிய கண்காட்சி

X
தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு உதகையில் துவங்கியது ஒரு வார காலம் ஓவிய கண்காட்சி...... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்து 16 பெண் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன ... நாடு முழுவதும் நேற்று தேசிய மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தேசிய மகளிர் தின விழாவினை முன்னிட்டு உதகையில் உள்ள சோலோ ஹார்ட் கேலரி சார்பில் ஒரு வாரம் காலம் நடைபெறும் ஓவிய கண்காட்சி துவங்கியது. இந்த ஓவிய கண்காட்சியில் அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் உள்நாடுகளில் இருந்தும் 16 பெண் ஓவியர்கள் வரைந்த 60 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓவிய கண்காட்சியில் பெண்களின் உருவங்கள், இயற்கை காட்சிகள், பெண் விவசாயிகளின் தத்துரூப ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இங்கே வைக்கப்பட்டுள்ள தத்ரூப ஓவியங்கள் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

