மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
X
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி,மு.க., - எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‛மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 108 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவிலான மொபைல், மூன்றுசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story