பொதுத்தேர்வு எழுதும் மாணவ கண்மணிகளுக்கு பிரபல கண் மருத்துவர் ரங்கநாதன் வழங்கும் டிப்ஸ் !

X
Namakkal King 24x7 |10 March 2025 4:03 PM ISTபொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கண் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குபவர் நாமக்கல் மகரிஷி கண் மருத்துவமனை மரு.பெ.ரங்கநாதன்
அதிக நேரம் படிப்பதனால் கண்களில் ஏற்படும் பாதிப்பு: கண் சிமிட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே படிப்பதால் கண் வறட்சி நோய் ஏற்படும். 1.திடீர் என்று கண்மங்கலாக தெரிவது, 2.கண்ணை அடிக்கடி சிமிட்டுவது,3.கண் எரிச்சல், 4.கண் சிவத்தல், 5. கண் வலி காணப்படும்.இப்படி இருந்தால் நீங்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். இது கண் வறட்சி நோயாக இருக்கலாம் அல்லது மெட்ராஸ் ஐ போன்ற கண் கிருமி தொற்று நோயாக இருக்கலாம் அல்லது கண்ணில் ஏற்படும் அலர்ஜி நோயாக இருக்கலாம் .இது எவ்வகையான நோய் என்று கண்டறிந்து கண் மருத்துவர்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு பெரும்பாலும் கண் வறட்சி நோய் தான் காணப்படுகிறது. இதற்காக கண் மருத்துவர்கள் கார்பாக்ஸி மெத்தில் செல்லுலோஸ் (Carboxymethylcellulose) என்ற மருந்தை கண் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த கண் வறட்சி நோயிலிருந்து மாணவ மாணவிகள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? நீங்கள் படிக்கும் போது இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் 20 செகண்ட் பார்க்க வேண்டும். 20 செகண்ட் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். 45 நிமிடங்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும் கண்களை அடிக்கடி சிமிட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் செல்போன் கம்ப்யூட்டர் போன்றவற்றில் உங்கள் பாடங்களை படிக்க நேர்ந்தால் மேசையில் அமர்ந்து படிக்கவும். குப்புறப் படுத்துக்கொண்டு படிப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, தலையை ஆட்டி ஆட்டி படிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சரியான வெளிச்சத்தில் படிக்க வேண்டும் . மேஜை விளக்கை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான அறையில் அமர்ந்து படிக்க வேண்டும், ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம். கீரை, காய்கறிகள், மீன், பால், முட்டை, கேரட், பப்பாளி விட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் போன்ற உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை கண் பயிற்சி செய்தால் உங்கள் கண்களின் ஏற்படும் வலி குறையும். சமூக நலன் கருதி வெளியிடுவோர் மகரிஷி கண் மருத்துவமனை நாமக்கல்.
Next Story
