விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான கால நீட்டிப்பு

X
Komarapalayam King 24x7 |10 March 2025 5:08 PM ISTபள்ளிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான கால நீட்டிப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் வருவாய் கிராமம் வாரியாக, விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் செ.ஜெயமணி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மார்ச். 31 வரை கால நீட்டிப்பு செய்யபட்டுள்ளது. அதன் படி பள்ளிபாளையம் வட்டாரத்திலும் வருவாய் கிராமம் வாரியாக இப்பணி துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடமை வாரியாக புவிசார்பு குறியீடு செய்த பதிவு விவரம், நில உடமை வாரியாக மின்னணு பயிர் சாகுபடி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக் குறியீடு எண் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே இனி வரும் காலங்களில் வழங்கப்படும். இதனால் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றை சாளர முறையில் பெறுவதுடன், வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும். எனவே, பள்ளிபாளையம் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும்,முகாம்கள் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதார் எண், மற்றும் இதர ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து பயன் பெறலாம். கிராமம் வாரியாக நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களின் விவரம் : 1. பள்ளிபாளையம் - பிரியங்கா – 9095585508 2. களியனூர் - சின்னதுரை – 9500945535 3. கடச்சநல்லூர் - கௌசிகா - 8940672372 4. களியனூர் அக்ரஹாரம் - பொன்னுசாமி – 9842844492 5. பள்ளிபாளையம் அக்ரஹாரம் - சௌந்தர்யா – 8012020141 6. எலந்தகுட்டை - விஸ்வப்ரியா – 6374826606 7. புதுப்பாளையம் அக்ரஹாரம் - இந்திரா – 9095059213 8. ஓடப்பள்ளி அக்ரஹாரம் – கண்ணன் 9342823385 9.பாப்பம்பாளையம் - கிருபா – 7667446909 10. கொக்கராயன்பேட்டை - கல்பனா – 9123598535 11.சமயசங்கிலி அக்ரஹாரம் - லாவண்யா – 9566950057 12.குமாரபாளையம் அக்ரஹாரம் - அழகுபாண்டி – 9443318717 13. குமாரபாளையம் அம்மானி - நிஷா – 7358928570 14.பல்லக்காபாளையம் - தினேஷ் - 8072142417 15. படைவீடு - அருண் – 9500270021 16. சௌதபுரம் - சரவணன் - 9942161465 ஆகவே பள்ளிபாளையம் வட்டார விவசாயிகள் கிராம வாரியாக உரிய ஆவணங்களை செலுத்தி தனிக்குறியீடு எண் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story
