பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் வழித்தடத்தில் பழைய பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கம்

புதிய பேருந்து இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் மண்டலம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழித்தடத்தில் தடம் எண்:  ஏ.37 பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அதிராம்பட்டினத்திற்கு பழைய பேருந்துக்கு பதிலாக  விடியல் பயணம் புதிய நகரப்பேருந்து துவக்க விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா, தொமுச பொதுச் செயலாளர் பாண்டியன், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (தொழில் நுட்பம்) எஸ்.ராஜேஷ், உதவிப் பொறியாளர் (வணிகம்) சரவணகுமார், பட்டுக்கோட்டை கிளை மேலாளர் கே.முருகானந்தம், அலுவலர்கள் பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story