பட்டுக்கோட்டையில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தினக் கருத்தரங்கு

மகளிர் தினக் கருத்தரங்கு
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை  வட்டக்கிளை  சார்பில்  "உலக மகளிர் தின விழா" கருத்தரங்கு  பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. வட்டத் தலைவர் த.சந்திரமோகன் தலைமை வகித்தார். பொதுப்பணித் துறையின் மேனாள் கண்காணிப்பாளர் என்.மீனாட்சி வரவேற்றார். மேனாள் வட்டத் தலைவர் கண.கல்யாணம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மார்ச் மாதத்தில் பிறந்த சங்க உறுப்பினர்களுக்கு எழுத்தாளர்                               ந.செல்வம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.  செயலாளர் இரா.அண்ணாதுரை வேலை அறிக்கை, பொருளாளர் சோம.ஆறுமுகம் நிதி-நிலை அறிக்கை சமர்ப்பித்துப் பேசினர். மகளிர் தினவிழாவை பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலைவர்  எஸ்.சண்முகப்பிரியா தொடங்கி வைத்து உரையாற்றினார். பேராவூரணி வட்டாட்சியர்  ஆர்தெய்வானை, முதுநிலை சித்த மருத்துவர் ஜீ.கனிமொழி ஆகியோர் வாழ்த்திப் பேசனர். மதுரையில் நடைபெற்ற மூத்தோருக்கான தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 77 வயதில் தங்கம் வென்ற நல்லாசியர் ஜெ.திலகவதி, நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாணவி செ.லோகப்பிரியா ஆகியோருக்கு கேடயம்  வழங்கி, சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், துணை ஆட்சியருமான  ஜெ.ஹஸ்ரத் பேகம் பாராட்டிப்பேசினார். புதுக்கோட்டை வீதி கலை-இலக்கியக் களம் அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்  கவிஞர்.மு.கீதா  "பெண்-புதிருமல்ல, புனிதமும் அல்ல! மனுசி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிறைவாக கிராம சுகாதார செவிலியர்  (ஓய்வு) என்.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Next Story