அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

ஆண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் கே.கலாராணி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் எம்.மஞ்சுளா, பள்ளியின் முன்னாள் மாணவர் ச.தங்கராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தலைமை ஆசிரியர் ச.சித்ராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். நிறைவாக ஆசிரியர் சி.லெட்சுமணசாமி நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.  மதன்பட்டவூர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மதன் பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் அ.அங்கயற்கண்ணி தலைமையில் நடைபெற்றது.  வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.கோகுலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.முத்துக்கிருஷ்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கா.சத்தியா முன்னிலை வகித்தனர்.  பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ச.இளமதியன் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டிமன்ற நடுவர் கோவி.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினார். ஓய்வு தலைமையாசிரியர் வை.கலைச்செல்வி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story