டால்மியா சிமென்ட் ஆலையில் பணியின் கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

டால்மியா சிமென்ட் ஆலையில் பணியின் கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு
X
டால்மியா சிமென்ட் ஆலையில் பணியின் கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்தனர்.
அரியலூர், மார்ச் 10- : அரியலூர் அடுத்த ஓட்டக்கோயிலுள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினர் திங்கள்கிழமை மனு அளித்தனர். ஆண்டிமடம் அடுத்த குவாகம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சாமியப்பன் மகன் அறிவழகன்(34) என்பவர் அரியலூர் அடுத்த ஓட்டக்கோயில் கிராமத்திலுள்ள டால்மியா சிமென்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 18.1.2025 அன்றிரவு பணியில் இருந்த போது, எதிர்பாரதவிதமாக இயந்திரத்தில் அவரது ஒரு கை சிக்கி, துண்டானது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து, கடந்த 23.1.2025 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலர் முன்னிலையில், நடைபெற்ற பேச்சுவாôர்த்தையில், ஆலை நிர்வாகம் தரப்பில் இருந்து மருத்துவச் செலவு மற்றும் ரூ.4 லட்சமும், ஓப்பந்ததாரர் தரப்பில் இருந்து ரூ.1 லட்சமும், தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்காததையடுத்து, பாமக மாவட்டச் செயலர் தமிழ்மாறன் தலைமையில், ஆண்டிமடம் ஒன்றியச் செயலர் தினகரன், நிர்வாகிகள் வெற்றி, செம்மலை, குமார் மற்றும் கையை இழந்த அன்பழகன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பொ.ரத்தினசாமியை சந்தித்து, தரவேண்டிய நிவாரணத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ரத்தினசாமி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story