சாலையோரம் நின்று கொண்டிருந்த மெடிக்கல் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின்னால் சரக்கு லாரி மோதி கேஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு*

சாலையோரம் நின்று கொண்டிருந்த மெடிக்கல் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின்னால் சரக்கு லாரி மோதி கேஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு*
X
சாலையோரம் நின்று கொண்டிருந்த மெடிக்கல் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின்னால் சரக்கு லாரி மோதி கேஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு*
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மெடிக்கல் கேஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் பின்னால் சரக்கு லாரி மோதி கேஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு தஞ்சாவூரில் இருந்து தனியார் நிறுவன டேங்கர் லாரி ஒன்று 16 டன் எடையுள்ள மெடிக்கல் கேஸ்(ஆக்சிசன்) ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(60) என்பவர் ஒட்டிச்சென்றார். அப்போது ஓட்டுநர் தூங்குவதற்காக அதிகாலை நேரத்தில் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் லாரியை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி வெளிநாடுகளுக்கு அலங்கார பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்காக பனை ஓலை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. சரக்கு லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம்(47) என்பவர் ஒட்டி சென்றார்.‌ இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் டேங்கர் லாரியின் பின்பகுதி அடைந்து வாழ்வு உடைந்து மெடிக்கல் கேஸ் எனப்படும் ஆக்ஸிஜன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தீயணைப்பு துறை விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அது மெடிக்கல் கேஸ் என்பதால் யாருக்கும் பிரச்சினை ஏற்படாது என தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மெடிக்கல் கேஸ் வெளியேறி வருகிறது. டேங்கரில் இருக்கும் வாயு முழுவதும் வெளியேறிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.‌
Next Story