ஶ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை குடோனில் தீ விபத்து.. கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி., ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..*

ஶ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை குடோனில் தீ விபத்து.. கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி., ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..*
X
ஶ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை குடோனில் தீ விபத்து.. கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி., ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..*
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை குடோனில் தீ விபத்து.. கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி., ஒரு மணி போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால்,கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஶ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மதுரை சாலையில் அண்ணா நகரில் கனி என்ற பெயரில் பழைய இரும்பு கடையை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், ஒயர்கள், சைக்கிள், பழுதான குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பழைய பொருட்களை வாங்கி உடைத்து தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறார். இங்கு 10-ம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் இன்று யாரும் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் இரும்பு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒயர்கள் வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒயர்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, மதுரை - கொல்லம் சாலையில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story