ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட புகையிலைகள் பறிமுதல் ஒருவர் கைது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் வேல்முருகன்(36). இவர் உடைகுளம் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ், காவலர்கள் ரமேஷ், கண்ணாயிர மூர்த்தி, அப்துல் சமது உள்ளிட்டர் கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 10 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.
Next Story

