ராமநாதபுரம் முப்பெரும் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர்கள் சுப்ரமணியன், வெங்கடாசலம், துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்டார் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாவட்ட தலைவர் இளையமறவன் முனீஸ்வரன் வரவேற்று பேசினார். கட்சியின் மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் எம்.சப்பானி முருகேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.கர்ணன், தேசிய செயலாளர் ஸ்ரீவை.எஸ்.சுரேஷ், இளைஞர் அணி தேசிய செயலாளர் திண்டுக்கல் பி.எஸ்.ஜெயராமன் உள்ளிட்டார் சிறப்புரையாற்றினர். முன்னதாக கமுதி குண்டாறு பாலத்திலிருந்து வான வேடிக்கை, இசை வாத்தியங்களும் முழங்க கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 500 பெண்களுக்கு இலவசமாக அரிசிப்பை, சேலை, போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் பேசியதாவது: வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொடர்ந்து செயல்பட்டு 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கு மேல் சிங்கம் சின்னத்தில் போட்டியிட தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்போம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் சுப்புராஜ், நல்லமுத்து, மாநில செயலாளர்கள் மோகன், நெல்லை பாலு, மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, சுபஸ்ரீ மணி, இருளாண்டி, ஜித்தன்ஜி ஏராளமான கட்சி நிர்வாகிகள், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story



