ராமநாதபுரம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஒன்றிய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி ராமநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கமுதியில் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கமுதி பேருந்து நிலையம் முன்பு ராமநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மும்மொழிக் கொள்கை வேண்டாம், இரு மொழிக் கொள்கையை போதும், ஒன்றிய அமைச்சரே பதவி விலகு என்ற கோஷங்களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் படத்தை செருப்பால் அடித்து தீ வைத்து எரித்தனர்.
Next Story