கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

கம்பம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
X
விபத்து
கம்பம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு கடந்த மாதம் 17 அன்று தீ பிடித்த நிலையில் 5 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 2-ஆவது முறையாக மீண்டும் குப்பை கிடங்கில் தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story