முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் அரசு பள்ளி நூற்றாண்டு விழா
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அருகே பள்ளியின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு மலர் தூவியும், பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்கள் . திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாச்சூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவானது 1925-2025 ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் வெகு விமர்சன முறையில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், அவர்களை வரவேற்கும் விதமாக பேண்டு, வாத்தியங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு திருப்பாச்சூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜான்சி புனிதவதி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கலந்துகொண்டு பள்ளியின் நூற்றாண்டு விழாவை குறித்தும், இப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் வளர்ச்சிகளைக் குறித்தும் பெருமிதமுடன் உரையாற்றினார். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேல் திருப்பாச்சூர் அரசு பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர் வசந்த்ரா, மற்றும் தலைமை ஆசிரியர்கள் கூறுகளில் கடவுள் எங்களுக்கு செய்த ஒரு பெரிய உதவி எதுவென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பாக படித்து விடை பிரிந்த மாணவர்களை மீண்டும் சந்திக ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாக ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிக்கு இலவசமாக நாற்காலிகள், மேஜைகள், பீரோ, மின்விசிறிகள்,மற்றும் விழாவிற்கு தேவையான பண உதவிகளை செய்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை கட்டி தழுவியும், கைகள் குலுக்கியும், ஒருவருடன் ஒருவர் நலன் விசாரித்துக் கொண்ட காட்சி காண்பவரே மெய் சிலிர்க்க வைத்தது. இந்த விழாவினை முன்னாள் மாணவர்கள் வசந்தகுமார் மற்றும் லிங்கேஷ்குமார் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தல், பின்னர் பள்ளி மாணவர்களின் ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story






