டிப்பர் லாரி அரசு பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

டிப்பர் லாரி அரசு பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
X
திருத்தணி டிப்பர் லாரி அரசு பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு ஐந்தாக உயர்வு
திருத்தணி டிப்பர் லாரி அரசு பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் விபத்து எண்ணிக்கை உயிரிழப்பு ஐந்தாக உயர்வு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டியில் மார்ச் 7ஆம் தேதி டிப்பர் லாரி -அரசு பேருந்து மோதிய விபத்தில் 37 பேர் படுகாயம், 4-பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நெசவு தொழிலாளியின் மகன் பூவரசன் (20) படுகாயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்து உள்ளார் இதனால் இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்கள் நான்கிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ளது இந்த ஐந்து பேரும் அம்மையார்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளிகள் ஆவார்கள்.
Next Story