காய்கனி அங்காடிக்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் : தமிழக அரசு : காங்கிரஸ் கொண்டாட்டம்

திருத்தணி நகராட்சியில் உள்ள காய்கனி அங்காடிக்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திருத்தணியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
திருத்தணி நகராட்சியில் உள்ள காய்கனி அங்காடிக்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் திருத்தணியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் மா.பொ.சி சாலையில் இயங்கி வந்த காமராஜர் மார்க்கெட் இந்த காய்கனி மார்க்கெட் பழமையானதாக இருக்கிறது கட்டடங்கள் பழுதடைந்துள்ளது என்று தற்போது உள்ள திமுக அரசு திமுக நகர மன்றத்தின் மூலமாக தீர்மானம் வைத்து ரூபாய் 3.2 கோடி மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டது இந்த கடைகளுக்கு கலைஞர் நூற்றாண்டு காய்கனி மார்க்கெட் என்று நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் பித்தளையில் வடிவில் பெயர்கள் வைத்தனர் இதற்கு திருத்தணியில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் நாடார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து தமிழக அரசுக்கு பழைய பெயர் தொடர் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர் இதற்கு தமிழக அரசு காமராஜர் காய்கறி அங்காடி என்று பெயர் வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டனர் இதற்கு நன்றி தெரிவித்து திருத்தணி காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் தியாகராஜன் நகர தலைவர் ராமகிருஷ்ணன் , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார தலைவர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து திருத்தணி நகராட்சி அருகிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து காமராஜர் புகழ் ஓங்குக என்று கூறி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் அப்பொழுது காமராஜர் பெயர் வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Next Story