வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

X
வேலூர் சத்துவாச்சாரி புது வசூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(40) பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, 18 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

