கால்நடை விவசாயிகளுக்கு தீவனங்களை அரசு இலவசமாக வழங்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்.

கால்நடை விவசாயிகளுக்கு தீவனங்களை அரசு இலவசமாக வழங்கக்கோரி நூதன  ஆர்ப்பாட்டம்.
X
கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு தீவனங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி, கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். பால்கொள்முதல் விலையை அரசு உயர்த்தாத காரணத்தால் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்கு கூட பணம் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் அதிக செலவாகிறது. இதனால் தமிழக அரசு கால்நடை தீவனங்களை கொள்முதல் செய்து கால்நடை விவசாயிகளுக்கு இலவசமாக மக்காச்சோள தீவனம் உள்ளிட்ட தீவனங்களை வழங்கக்கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் வி.எம்.குப்பன் தலைமையில் விவசாயிகளே கால்நடைகள் போல அமர்ந்து தீவனங்களை சாப்பிடுவது போல் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டதலைவர் வாக்கடை புருஷோத்தமன் கால்நடை விவசாயிகளுக்கு இலவசமாக தீவனங்களை வழங்கக்கோரி கோஷமிட்டார். மேலும் இதில் வடுகசாத்து தாமோதரன், பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். .
Next Story