ஆரணியில் திமுகவினர் மத்திய அமைச்சரின் உருவப்படம் எரித்து ஆர்ப்பாட்டம்

ஆரணியில் திமுகவினர் மத்திய அமைச்சரின் உருவப்படம் எரித்து ஆர்ப்பாட்டம்
X
தமிழக எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என கூறிய மத்திய கல்வி அமைச்சரை கண்டித்து ஆரணி அணணாசிலை அருகில் திமுகவினர் மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி, தமிழக எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என கூறிய மத்திய கல்வி அமைச்சரை கண்டித்தும், உருவப்படத்தை எரித்தும் ஆரணி அணணாசிலை அருகில் திமுகவினர் மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதாப் பேசியதை கண்டித்து ஆரணி அண்ணாசிலை அருகில் நகரமன்றதலைவர் ஏ.சி.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அமைச்சரின் உறவு படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தொகுதிசெயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.எச்.இப்ராகிம், இளைஞரணி மாவட்டதுணைஅமைப்பாளர் ஏ.எம்.ரஞ்சித்,தொழிற்சங்க நிர்வாகி காசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story