ஆரணி கமண்டலநாகநதியில் தவறி விழுந்த வாலிபர் சடலத்துடன் தீயணைப்புத்துறையினர் மீட்பு.

ஆரணி கமண்டலநாகநதியில் தவறி விழுந்த வாலிபர் சடலத்துடன் தீயணைப்புத்துறையினர் மீட்பு.
X
ஆரணி அடுத்த பையூர் கமண்டலநாகநதியில் மதுபோதையில் டீக்கடை உரிமையாளர் தவறி விழு்ந்ததால் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.
ஆரணி அடுத்த பையூர் கமண்டலநாகநதியில் மதுபோதையில் டீக்கடை உரிமையாளர் தவறி விழு்ந்ததால் சடலத்துடன் திங்கள்கிழமை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். ஆரணி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க் மகன் மூர்த்தி(58) என்பவர் பையூரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுபோதையில் பையூர் ஆற்றுப்பாலத்தில் நின்றுகொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராததால் வீட்டிலிருந்தவர்கள் மதுபோதையில் வெளியே எங்கேயாவது சென்றிருப்பார் என தேடியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை பையூர் கமண்டலநாகநதியில் சடலம் மிதந்துள்ளது என ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் ஆரணி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் பூபாபல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் பையூர் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மூர்த்தி(58) என தெரியவந்தது. பின்னர் இறந்த மூர்த்தி மகன் வினோத்(28) ஆரணி கிராமிய போலீஸில் புகார் கொடுத்ததின்பேரில் எஸ்.ஐ மகாராணி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story