அதிரடி நடவடிக்கைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வெளியே போக்குவரத்துக்கு எதிராக இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்: போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது* பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதேசமயம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு போதுமான அளவு இடம் இல்லை என்று தான் இருசக்கர வாகன ஓட்டிகள் புதிய பேருந்து நிலையம் வெளிப்பகுதியில் இயங்கி வரும் கடைகளுக்கு வருபவர்கள் சாலையில் முன்புறமாகவே நிறுத்திவிட்டு செல்லும் சூழல் அமைந்துள்ளது இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் வெளிப்பகுதியில் நகராட்சி சார்பில் கடைகளுக்கு முன்பாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் மீண்டும் வணிக நிறுவனங்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையிலான நகர காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் விதிகளை மீறி சாலைகளில் நிறுத்தும் வாகனங்கள் மீது ஆன்லைன் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
Next Story



