காரை தள்ளி சென்ற மாணவர்கள்

X
உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன். இவர், விழுப்புரத்தில் இருந்து நேற்று உளுந்துார்பேட்டை ஐ.டி.ஐ.,க்கு எலக்ட்ரிக் காரில் வந்தார். உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்தபோது, சார்ஜ் இல்லாமல் கார் நின்றது.இதையடுத்து, காரை அங்கேயே நிறுத்திவிட்டு முதல்வர் சீனிவாசன் ஐ.டி.ஐ.,க்கு வந்தார். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில், மாணவர்கள் சிலர் காரை, ஐ.டி.ஐ., வரை 3 கி.மீ., துாரத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தனர். இதனால், மாணவர்கள் சோர்வடைந்தனர். காரை மாணவர்கள் தள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

