அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

X
கச்சராபாளையம் அடுத்த வடக்கனந்தல் பேரூராட்சியில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் கருப்பன் வரவேற்றார். கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அக்ராயபாளையம் வரை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராகேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

