தென்காசியில் கனமழை எச்சரிக்கை: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு

தென்காசியில் கனமழை எச்சரிக்கை: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு
X
கனமழை எச்சரிக்கை: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடா்பாக அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: தென்காசி மாவட்டத்திற்கு மாா்ச் 11 இல் கனமழைக்கான அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. எனவே, சாா்நிலை அலுவலா்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இடா்கள் ஏற்படுவதைத் தவிா்க்கவும், இடா் ஏற்படின் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். பல்வேறு துறை அலுவலா்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு ஏதுவாக பேரிடா் கால மாவட்ட கட்டுப்பாடு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றாா் அவா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், மாவட்டவருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்புலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியா்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன்கோவில்), வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மைத் துறை) அரவிந்த் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் லந்து கொண்டனா்.
Next Story