கன்னியாகுமரியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

X
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலை ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. சமீபத்தில் விபத்துகள் அதிகரித்ததையடுத்து, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நடைபாதை ஆக்கிரமிப்பு, இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் ஆகியவை விபத்துகளுக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, காந்தி மண்டபம் முதல் விவேகானந்தபுரம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story

